உழைக்கும் வர்க்கம்

உங்கள் நண்பன் பிரகாஷின்
171 ம் படைப்பு.....

சலியுட்....
தலைவா....
சலியுட்.....
உன்
உழைப்புக்கு
தானே...
சலியுட்.....!

(2)

வாழும் வாழ்க்கை தான்...
வறுமைக்கோடு தான்...
இருந்தாலும் போடுற
நீயும் ரோடு தான்....

கண்ணீர் விட்டு தான்....
படும் பாடு தான்....
இருந்தாலும் இங்க
இல்ல மேடு தான்....

ஓடி ஓடி தான்....
உழைக்கும் வர்க்கம் தான்....
சொல்லவில்ல தான்...
எந்த ஏடும் தான்.....

செல்லும் பாதை தான்...
முட்கள் அதிகம் தான்......
வாங்கும் கூலியோ
கொஞ்சம் குறைவு தான்....

உடல் எடையும்..
கொஞ்சம் குறைவு தான்...
தூக்கும் பாரமோ...
ரொம்ப அதிகம் தான்....


பேரம் பேசி தான்...
உழைப்பை சுரண்டும்....
இது முதலாளித்துவம் போதை போதை தான்......

பாரம் தூக்கி தான்
நாட்டை காக்கும்....
நண்பா..!
நீயும் பெரிய மேதை மேதை தான்.....

(சலியுட்)

தோளில் தானே சுருக்கும் இருக்கும்.....
உடம்பில என்றும் தெம்பு இருக்கும்.....

இது ஓயாமல் என்றும் உழைக்கும் வர்க்கம்......
கொஞ்சம் ஓஞ்சா போதும் கிடைக்கும் சொர்க்கம்.....

தூக்கும் தலையில் பாரமுண்டு....
ஆனால்,
மனதினில் என்றும் பாரமில்லை.....

கிழிந்த சதையில் வலியுமுண்டு....
ஆனால்,
இதயத்தில் என்றும் வலியுமில்லை......

(சலியுட்)

வேர்வ சிந்தி தான்...
இரத்தம் சிந்தி தான்...
உயிர கொடுத்து தான்...
உழைக்கும் சாதி தான்....

இஷ்டப்பட்டு தான்...
கஷ்டப்பட்டு தான்...
மூட்டை தூக்கி தான்...
சட்ட தைச்சி தான்...
உழவு செய்து தான்...
ஊனை வருத்தி தான்...
வெயில் மழை என்று பாரமல்....
இது உழைக்கும் வர்க்கம் தான்.....

சிகரம் தொட தான்...
சிறகடிக்கும் சிறகு தான்...
அகிலம் என்றுமே...
உனக்கு அடிமை தான்....!!!

சலியுட்....
தலைவா....
சலியுட்.....
உன்
உழைப்புக்கு
தானே...
சலியுட்.....

சலியுட்....
தலைவா....
சலியுட்.....
உன்
உழைப்புக்கு
தானே...
Big சலியுட்.....!

Timepass writer...
#Prakash

எழுதியவர் : வாழ்க்கை (1-May-17, 9:26 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : ulaaikkum varkkam
பார்வை : 318

மேலே