வீடு

இயற்கையின் துணை கொண்டு
செயற்கையாக உருவாக்கப்பட்ட குட்டி உலகம்!
பாசப் பிணைப்புகளின் சங்கமம்!
குழந்தைகளின் முதல்நிலை கல்விக் கூடம்!
வெளியுலக பணிகளின் களைப்பிலிருந்து
விடுவிக்கும் இளைப்பாற்றி!
அன்பையும், ஆரோக்கியத்தையும்
உணவாக ஊட்டும் சுகாதார உணவகம் !
நாள்தோறும் வழிபடும் ஆலயம்!
தினமும் சந்தோஷ கனிகளை
கொடுக்கும் சொர்க்கம்!
உயிரற்ற பொருளுக்கெல்லாம்
உயிர் கொடுக்கும் அம்மா !
நிலையில்லா வாழ்வில் நிலையான
வாழ்க்கையை கொண்ட வாழ்விடம் வீடு!

எழுதியவர் : உமா (1-May-17, 4:43 pm)
Tanglish : veedu
பார்வை : 225

மேலே