மனிதருள் புனிதர்

சித்தமெல்லாம் சிவமயமே என்று போதித்ததால் ஆன்மிகவாதியென்று
உலகமென்னை நோக்க,
சிவமென்றால் அன்பு என்று உணர்ந்த நானோ பகுத்தறிவுள்ள மனிதனாய் வாழ்கிறேனென்றார் அந்த மனிதருள் புனிதர்...
காவி அணிந்தாலும், கருப்பு அணிந்தாலும் கண்ணியத்தோடும், ஒழுக்கத்தோடும் ஒன்றியே வாழ்ந்தார் அந்த மனிதருள் புனிதர்...
ஆயிரம் ஆயுதங்களுடன் பீரங்கிகளின் கூட்டம் வேட்டையாட வந்தபோதிலும் அகிம்சை கொள்கையில் பிடிவாதமாய் அறவழியில் போராடினார் அந்த மனிதருள் புனிதர்....
எதிரிகளும் மதிக்கும் அந்த அரையாடை மனிதரைப் போல் ஒருவரைக் காண்பது என்பது அந்த உலகில் அரிதாகுமே...
தான் உயிர் வாழ வேண்டுமென்ற ஆசையைத் துறந்து மக்களுக்காக சாதி, இனம், மதம், மொழி பாராமல் போராடினார் அந்த மனிதருள் மாணிக்கம்...
அந்த மாணிக்கத்தைக் கவசமாகி பாதுகாக்க வேண்டிய பாறைகளே சுக்குநூறாய் உடைத்து,
நாட்டையே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர எண்ணங் கொண்டு சதிகளை அரங்கேற்றி, அப்பாவி மக்களைத் திசை திருப்பி, இனம், மொழி, சாதி, மதமென வெறியைத் தூண்டி இன்னும் இரத்தம் குடித்துக் கொண்டிருக்கின்றனர் பதவி, பணமென் ஆதிக்க வெறியால் நிறைந்த குள்ளநரிகளாய்....