காலைத் தென்றல்

காலைத் தென்றல் ஆடிவரும்
கோலாகல நேரத்தில்
அழகுமணம் வீசி வரும் மலரே!

உன்னை நினைத்து
பூபாளம் பாடுவதில்தான்
என் சொந்த முகாரி ராகம்
எனக்கு மறந்து போக வேண்டுமெனும்
சபதத்தில் மகிழ்ந்து பாடுகிறேன்
அல்லது பாடுவதாக பாவனை செய்கிறேன்...

அதனால்
மலரே!
உன்னிடம் ஓர் வேண்டுகோள்...

எனக்காகவாவது
நீ
நித்தமும் மலர்ந்து விடு செல்லமே!!!

எழுதியவர் : சாந்தி ராஜி (2-May-17, 1:11 pm)
Tanglish : kaalaith thendral
பார்வை : 282

மேலே