காயம்
காயம் கண்ட மனமே
மருந்தை தேடி அல்ல
வலியை தாங்கி முன்னேறு
வலியால் விளைந்த கண்ணீரே
சோகம் தேடி அல்ல
தீர்வை நோக்கி முன்னேறு
தீர்வை தேடும் அறிவே
ஓய்வை தேடி அல்ல
நேரம் பாராது முன்னேறு
நேரம் பாரத உழைப்பே
விதியை தேடி அல்ல
முயற்சியை விடாது முன்னேறு
முயற்சியை நம்பும் மனிதா
வெற்றியை தேடி அல்ல
முழுமையை நோக்கி முன்னேறு
முழுமை கண்ட மனமே
முடிவை தேடி அல்ல
வருபவை நோக்கி முன்னேறு ....