ஹைக்கூக்கள்

ஊதிய சோப்புநுரை
அங்கும் இங்கும் அலைகிறது
சிறுமியின் பார்வை

ஓடியவள் விழுகிறாள்
மறைந்து போகிறது
கொலுசொலி

உருகும் தார்ச்சாலை
இரு நீண்டகோடுகளை வரைகிறது
தண்ணீர் லாரி

பிறை நிலவோடு வானம்
முழுமை பெறவில்லை
எழுதிய கவிதை

நிலவற்ற வானை
வெகு நேரமாய் பார்க்கிறாள்
வெள்ளை புடவைக்காரி

பெளர்ணமி இரவு
மொட்டைமாடியில் முடிகிறது
இரவு உணவு

வளர்பிறை நாள்
முழுதாய் வந்திருக்கிறது
அப்பாவின் சம்பளம்

ஓங்கி ஒலித்த கைத்தட்டல்கள்
அடங்கும் முன்பே முகத்தில் அடிக்கிறது
சூரிய ஒளி

மார்கழியில் ஒருத்தி
புள்ளிகளை இணைக்கையில் வருகிறது
சூரியனும் தாமரையும்

அப்பாவின் உரத்தகுரல்
பயத்தில் கிளை தாவுகிறது
குரங்கு

துளிர்த்த இலைகளை
தன்னில் அழகாய் காட்டுகிறது
முகம் காட்டும் கண்ணாடி

எழுதியவர் : கி. கவியரசன் (3-May-17, 11:40 am)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 143

மேலே