மன்னிப்பு
நான் உனக்கு இழைத்துவிட்ட
எல்லாத் துரோகங்களுக்குமான
மனம் திறந்த மன்னிப்பை
உன்னிடம் கேட்க வரும்போதெல்லாம்
உன் வீட்டுக்கதவுகளையும்
உன் மனக்கதவுகளையும்
சாத்தியே வைத்து உள்ளிருக்கிறாய்
நான் எனது
மனம் நிறைந்த அன்பை
உன்னிடம் காட்ட வரும்போதெல்லாம்
உன் வீட்டுக்கதவுகளையும்
உன் மனக்கதவுகளையும்
திறந்து வைத்து வெளி நின்றாயோ
அதே தீவிரத்துடன்
அதே பிடிமானத்துடன்
அதே முழுமனதுடன்