சுஜித் தமிழன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சுஜித் தமிழன் |
இடம் | : sulur |
பிறந்த தேதி | : 05-Dec-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 112 |
புள்ளி | : 54 |
நான்
நாம் படிக்கும்போது பிரிந்திருந்த நாட்களில்
உனக்கு எழுதிய காதல் கவிதைகளையும்
நீ எனக்கு எழுதிய காதல் கடிதங்களையும்
நாம் மாறி மாறி பரிசளித்துக் கொண்ட
புத்தகங்களையும் பரிசுப் பொருட்களையும்
உனக்காக நான் வாங்கிய அத்தனை
பருத்திப் புடவைகளையும் கொளுத்தி விட்டேன்
நம் படுக்கையறைச் சுவர் முழுவதும் மாட்டியிருந்த
நம் மோகப் பொழுதுகளில்
நாம் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை
ஒவ்வொன்றாக அடித்து நொறுக்கி விட்டேன்
நாம் பொன்மஞ்சள் விளக்கொளியில்
கூடியுறவுகொண்டுறங்கிய
வெள்ளை மெத்தைகளையும்
வெள்ளை மெத்தை விரிப்புகளையும்
கிழித்து எறிந்து விட்டேன்
நீ வாஞ்சையுடன் வளர்த்து வந்த
சிகப
இந்தக் கைகள்
இந்தக் கைகள் தான்
இதே கைகள் தான்
என்னை விட்டுப் போகாதென்று என்று
என் கையோடு உன் கைகோர்த்து நின்ற போது
வலுக்கட்டாயமாக என் கையிலிருந்து
உன் கைகளை பிரித்துதறிய கைகள்
இந்தக் கைகள் தான்
இதே கைகள் தான்
ஒரே நாளில் தான் உலகம் இல்லையென்றான போதும்
ஒரே நொடியில் தன் நேசம்
தன் கழுத்து நெறிய கொல்லப்படும்போதும்
ஒரே தொலைபேசி அழைப்பில்
ஒரே ஒரு குறுஞ்செய்தியில் ஒருவர்
தன்னை வெட்டி எரியும் போதும்
தனக்கு நேர்வது என்னவென்றே தெரியாமல்
தனியாக அதிர்ந்து நின்ற உன்னையழைத்து
அணைத்து ஆறுதல் கூறி அன்பறிவிக்காமல் போன கைகள்
இந்தக் கைகள் தான்
இதே கைகள் தான்
என்னை விட்டுப் போவது
கலையிழந்து
களையிழந்து
நிலையிழந்து
விலையிழந்து
கவனமிழந்து
யவனமிழந்து
ஒளியிழந்து
வழியிழந்து
அறமிழந்து
கரமிழந்து
உயிரிழந்து
பெயரிழந்து
மகிழ்விழந்து
பகிர்விழந்து
உன்னையிழந்து
என்னையிழந்து
நிற்கின்றோம்
நாம் குடியிந்த வீடும்
நானும்
மீண்டும் மீண்டும்
மலையில் தோன்றி கலையில் மீண்டும் மீண்டும் வளர்ந்த மாத்தமிழ்
மூத்த தொன்மையால் மீண்டும் மீண்டும் மூவேந்தர் காத்த மூத்தமிழ்
சங்கம் வைத்து மீண்டும் மீண்டும் அங்கம் பெருக்கிக்கொண்ட தங்கத்தமிழ்
இயல் இசை நாடகமென மீண்டும் மீண்டும் முப்பொழுதும் வளர்ந்த முத்தமிழ்
மொழி என்பதன் இலக்கணமாய் மீண்டும் மீண்டும் விளங்கும் தொல்தமிழ்
பூத்த இளமையால் மீண்டும் மீண்டும் பூலோகம் போற்றிய பூந்தமிழ்
வாய்த்த வளமையால் மீண்டும் மீண்டும் வரலாறு வாழ்த்தும் வண்டமிழ்
மீண்டும் மீண்டும் சேர்த்த செம்மையால் செம்மொழி ஆன செந்தமிழ்
ஈர்த்த இனிமையால் இயல்தோறும் மீண்டும் மீண்டும் வளரும் இன்றமிழ்
பெற
விதிகளை மறந்துவிட்டு
சதிகளை திறந்து விட்டு
பேச்சுவார்த்தைக்கு அழைத்து
மூச்சுக்காற்றை நிறுத்தி
முரசறையும் முன்னே
சிரசறிந்து
குழியிலிருந்து கொண்டே
பழி தீர்த்துக்கொண்டு
வெடிகளைப் புதைத்து வைத்து
நொடிகளில் கொன்று
வெள்ளை கொடி வைத்திருப்பவனையும்
கொள்ளை நோய் போல் தாக்கி
ஆள நாடு கேட்டவனோடு
வாழ வீடு கேட்டவனையும் கொன்று
மண்ணுக்காக சண்டையிடுபவனை
விண்ணிலிருந்தே வீழ்த்தி
அடைக்கலம் என்று கூறி
அடக்கம் செய்து
அழுகவே துணை இல்லாதவனை
உலகத்துணையுடன் உயிரெடுத்து
தம்பியின் மகனைக் கொல்ல
அண்ணன் ஆயுதம் வழங்கி
ஒதுங்கி வாழ்பவனையும்
ஓடி ஒளிபவனையு