எந்தக் கை

என் ஒரு கையில்
பாசத்துக்குச் செய்த
பாவத்தின் ரத்தக் கறை

இன்னொரு கையில்
உன் முதுகில் குத்திய
என் துரோகத்தின் விஷ ஈரம்

இதில் எந்தக் கைகொண்டு
உன் கை கோர்க்கவில்லையென
நீ சாபம் விடுகிறாய் அழகி?

எழுதியவர் : (3-May-17, 1:10 pm)
Tanglish : enthak kai
பார்வை : 51

மேலே