சுஜித் தமிழன்- கருத்துகள்

நன்றி ..வாழ்த்து அனுப்பிய அனைவருக்கும் நன்றி

அருமை தோழமையே ... இதே கோபம் எனக்கு வந்த போது நான் பிறரை விமர்சிக்க வில்லை ... மாறாக நாம் நமது கடமையை , அன்பை ஓழுங்காக வெளிப்படுத்துகிறோமா என்று தன தோணியது ... அதன் விளைவே என் உடல் ஊனமுற்றவன் கவிதை ... முடிந்தால் படித்துப்பாருங்கள் ...


உடல் ஊனமுற்றவன்



மூட நம்பிக்கைகளில்
மூழ்கிப்போகும் போது
மூளை வளர்சியற்றவனாகிறேன்

வன்கொடுமைகளுகெதிராய்
வாய் திறக்காத போது
வாய் பேச முடியாதவனாகிறேன்

காணா கொடுங்காட்சியெல்லாம்
கண்ணெதிரே நடந்தாலும்
என்னிலோன்னும் சேதமில்லை
என்றெண்ணி மகிழ்ந்துவிட்டு
கண்மூடி செல்லும்போதேல்லாம்
கண் பார்வையற்றவனாகிறேன்

நியாயமற்ற காரணங்களினால்
காயமுற்று வாழ்வோர்
வாய் கிழிய கத்தும்
கதறலை கேட்டும்
கடந்து போகும் போது
காது கேளதவனாகிறேன்

கையேந்தி கேட்பவனுக்கும்
போய்யேந்தி வாழ்பவனுக்கும்
கொடுக்க வேண்டியவற்றை
கொடுக்க முடியாத போது
கையிரண்டும் இழந்தவனாகிறேன்

மனிததத்துக்கெதிராய்
சதித்திட்டம் தீட்டி
மதிகெட்டு வாழ்வோரை
எட்டி உதைத்து ஏறி மிதிக்காத போது
கால் இழந்தவனாகிறேன்

ஆதலால்
உடல் உறுப்புகள்

இல்லாமல் போனால் மட்டுமல்ல
செல்லாமல் போனாலும்

செயலிழந்தால் மட்டுமல்ல
இயல்பிழந்தாலும்

நாமெல்லாம்
உடல் ஊனமுற்றோரே...

அருமை தோழி ... கிராமத்து மொழி அட்டகாசம் .. அந்த மண்ணின் கவிதைகளை அந்த மண்ணுக்கே உரிய மொழியில் படிக்கும்போது அருமையாக இருக்கிறது .. உங்கள் கவிதையின் உச்சம் என்று இதை சொல்லல்லாம் ... தொடர்க தோழி ... நன்றி

ஆமாம் தோழி ... கனவுகள் மட்டுமே என்னை எழுத வைக்கிறது ... கருத்துக்கு நன்றி ... தொடர்வோம்

நன்று ... பெரிய சிந்தனை உள்ளது ... வாழ்த்துக்கள்... ஆனாலும் எதுகை மோனையில் கொஞ்சம்தட்டுப்பாடு தெரிகிறது...அது சேர்ந்துவரும் பொது கவிதை முழுமை அடையும் ... வழுட்டுக்கள்

நன்றி தோழியே ... தொடர்வோம் தோழமையோடு ...

நன்றி , தரணி உள்ளவரை தமிழ் வாழும் ... நம் கவிதையில் வாழ்வதைப்போல் ... மிக்க நன்றி ...


சுஜித் தமிழன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே