நீ என் வீட்டின் எதிரிலிருந்தால்
வாசல்
எல்லோருக்கும் கோலமிட
எனக்குமட்டும் உன்னைநோக்கி பாலமிட
திண்ணை
எல்லோருக்கும் இளைப்பாற
எனக்கு மட்டும் உன்னுடன் இதயமாற
கதவு
எல்லோருக்கும் பாதுகாப்பாய்
எனக்கு மட்டும் உனக்கான பார்வைக்காய்
ஜன்னல்
எல்லோருக்கும் வெளிச்சத்திற்கு
எனக்கு மட்டும் உந்தன் வேடிக்கைக்கு
மொட்டைமாடி
எல்லோருக்கும் காற்றுக்கு
எனக்கு மட்டும் உன்னுடனான காதலுக்கு
மொத்தத்தில் வீடு
எல்லோருக்கும் வசிக்க
எனக்கு மட்டும் உன்னை ரசிக்க
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
