உடல் ஊனமுற்றவன்

மூட நம்பிக்கைகளில்
மூழ்கிப்போகும் போது
மூளை வளர்சியற்றவனாகிறேன்

வன்கொடுமைகளுகெதிராய்
வாய் திறக்காத போது
வாய் பேச முடியாதவனாகிறேன்

காணா கொடுங்காட்சியெல்லாம்
கண்ணெதிரே நடந்தாலும்
என்னிலோன்னும் சேதமில்லை
என்றெண்ணி மகிழ்ந்துவிட்டு
கண்மூடி செல்லும்போதேல்லாம்
கண் பார்வையற்றவனாகிறேன்

நியாயமற்ற காரணங்களினால்
காயமுற்று வாழ்வோர்
வாய் கிழிய கத்தும்
கதறலை கேட்டும்
கடந்து போகும் போது
காது கேளதவனாகிறேன்

கையேந்தி கேட்பவனுக்கும்
போய்யேந்தி வாழ்பவனுக்கும்
கொடுக்க வேண்டியவற்றை
கொடுக்க முடியாத போது
கையிரண்டும் இழந்தவனாகிறேன்

மனிததத்துக்கெதிராய்
சதித்திட்டம் தீட்டி
மதிகெட்டு வாழ்வோரை
எட்டி உதைத்து ஏறி மிதிக்காத போது
கால் இழந்தவனாகிறேன்

ஆதலால்
உடல் உறுப்புகள்

இல்லாமல் போனால் மட்டுமல்ல
செல்லாமல் போனாலும்

செயலிழந்தால் மட்டுமல்ல
இயல்பிழந்தாலும்

நாமெல்லாம்
உடல் ஊனமுற்றோரே...

எழுதியவர் : சுஜித்தமிழன் (23-Sep-13, 4:26 pm)
சேர்த்தது : சுஜித் தமிழன்
பார்வை : 75

மேலே