கீதை நெறி வாழவேண்டும்

கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!

கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!

கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!

கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும் .....!!!

^^^

அகராதி தமிழில் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-May-17, 8:08 pm)
பார்வை : 60

மேலே