எத்தனை எத்தனை

இறைவனின் படைப்பில்
விசித்திரங்கள் எத்தனை...
அதில் ஆச்சிரியத்தின் உச்சத்தில்
மனித மனங்கள் தான் எத்தனை ??

மனதில் ஒளிந்திருக்கும்
எண்ணங்கள் எத்தனை...
எண்ணங்களை பிரதிபலிக்கும்
செயல்கள் தான் எத்தனை ??

நெஞ்சில் உதிக்கும் நிறைய
ஏக்கங்கள் எத்தனை..
ஏக்கங்கள் ஏக்கங்களாக கரைய
எழும் சோகங்கள் தான் எத்தனை ?

இருக்க இடம், உண்ண உணவின்றி
தவிக்கும் ஜீவன்கள் எத்தனை..
கோடிசேர்க்க,பதவிகாக்க இரக்கமின்றி
பிறர் (குடி)அழிக்கும் எமன்கள் தான் எத்தனை ??

கருவில் மிதந்து,
புவியில் நடந்து
மண்ணுக்குள் உறங்கும்
இவ்வாழ்வுதனில்
பணம் தேடி ,பதவி தேடி
நம் பகட்டுக்காக போடும்
நாடகம்தான் எத்தனை ..!!??

ஆண்டுகள் கோடி
சுழலும் அகிலத்தில்
ஒரு சிறு புள்ளி போல்
நமது வருகை மறைய ,
கருவறை முதல்
கல்லறை வரை
கொண்ட பயணத்தில்
கொண்டு செல்ல
ஏதும் இல்லாதபோது
கொடுத்து செல்ல
மனம் வந்தால்
மனதார வாழ்த்த
உள்ள நல்உள்ளங்கள்தான்
எத்தனை!! .எத்தனை..!!

அத்தனை உள்ளங்களும்
மகிழ கொடுத்துச்செல்வோம்
அன்பு முதல் ...
பணம் முடிய ..

என்றும் ...என்றென்றும் ..
ஜீவன்

எழுதியவர் : Jeevan (3-May-17, 9:49 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : ethtnai ethtnai
பார்வை : 102

சிறந்த கவிதைகள்

மேலே