விலை மாது

விலை மாது ..!!
~##############~

எண்ணெய் குறைய குறைய
ஒருவர் மாற்றி
ஒருவர் அதில் ஊற்ற ஊற்ற
தன்னை எரித்துக்கொண்டு
பிறருக்கு ஒளிதரும்
விளக்கன்றோ அவள் ...!!

தன் வயிற்றுப்பசியாற
தன் உடலை பிறருக்கு
உணவாக்கி
வியர்வையில்
விடியலைத் தேடும்
அபலையன்றோ அவள் ..!!

தன்னை நம்பிய
உறவுகள் உயிர்வாழ
இரவுக்குள் தன்னை விதைத்து
இருளுக்குள் வாழ்வை புதைத்து
நிழலாய் வாழும்
நிஜமன்றோ அவள் ..!!

மேனியை சில மிருகங்கள்
மேயும்பொழுதெல்லாம்
பெற்றோர்கள் காக்கவும் ,
பிள்ளைகள் வளர்க்கவும் ,
உடலை விருந்தாக்கி
உள்ளத்தை கல்லாக்கி
நித்தம் கண்ணீரில்
தன் பாவத்தைக் கழுவும்
உத்தமியன்றோ அவள் ..!!

காலம் நூறு முன்பு
தேவர் அடியார்களாய்
வாழ்ந்த மங்கை அவள் ,,!!

மனிதம் மறைய ,
மனங்கள் இறுக,
தேவர் அடியார்
வார்த்தையும் சுருங்க,
வாழ்வும் நசுங்க,
பூவை அவள் நாராய் விழ
மாது அவள் உடலை விலை பேச
தெருக்களின் ஓரங்களில்
நிற்கும் நிலைமை
என்று மாறுமோ ???
பெண்மையை காக்கும்
ஆண்மையைத் தேடி
அவளின் கண்கள் ....??!!
😭😭
என்றும்...என்றென்றும் ..
ஜீவன்

எழுதியவர் : Jeevan (3-May-17, 9:55 pm)
Tanglish : vilai maathu
பார்வை : 534

மேலே