கோமாளி

முகமூடி அணிந்த கோமாளி
முற்றிலும் ஏமாந்த ஏமாளி

ஆறுபோல கண்ணீர் பொங்கையில்
அதை தடுத்து நிறுத்த இந்த முகமூடி!

துயரம் துரத்தி துரத்தி வருகையில்
துணையாய் இந்த முகமூடி!

காயங்கள் அந்த இதயத்தில்
புன்னகை இந்த இதழ்களில்
அதை சரிகட்ட இந்த முகமூடி!

காலியிடத்தை நிரப்ப இங்கே மேலும் ஒரு இடைவேளை...
காலங்கள் நகர்த்த அங்கே
தனிமை ஒன்றும் மாறவில்லை!

அனைவருக்கும் அளித்தாய் மகிழ்ச்சி எனும் உணர்ச்சி
உன் ஆற்றாமைக்கு காரணம்
சிலர் செய்த சூழ்ச்சி!

முகமூடி அணிந்த கோமாளி
முற்றிலும் ஏமாந்த ஏமாளி!!!

துயர கடலில் மிதக்கும்
உன் இதயத்தை நீயே வினவி பார்

இந்த கண்ணீர் துளிகள் அனைத்தும்
அந்த கோமாளிக்கு சொந்தமா??-அல்ல
உந்தன் ஆழ்மனதில் புதைக்க முற்படும் துக்கங்களுக்கு சொந்தமா?

எழுதியவர் : ஷாகிரா பானு (4-May-17, 3:33 pm)
Tanglish : komali
பார்வை : 1975

மேலே