என்று சிறக்கும் இவன் வாழ்வு

ஏர் உழுது விதை விதைத்து
பொழு தெல்லாம் வெயில் குளித்து
கரிசனை யாய்ப் பயிர் வளர்த்து
கழனி யெல்லாம் பசுமை கூட்டி
அகிலத்தில் வாழுகின்ற
அனைத்து மக்களுக்கும்
பசிநூரச் சோறுதரும்
உழவா ஏன் உன் வாழ்வு
இன்னும் சிறக்கவில்லை
இருள் நீங்கி மகிழ்வாய் நீ
இன்னும் ஏன் சிரிக்க வில்லை
ஆக்கம்
அஷ்ரப் அலி