சொப்பன் சொப்பனா

டேய் மருது எம் மருமவ முத்தம்மாளுக்கு மொதல் பிரவசத்திலேயே ரட்டைக் கொழந்தை பொறந்திருக்குது. ஒரு பெண் கொழந்தையும் ஒரு ஆண் கொழந்தையும். நீ ரொம்பக் குடுத்து வச்சவண்டா மவனே. சரி நீயும் முத்துவும் புள்ளைங்களுக்கு பேருங்கள முடிவு பண்ணீட்டீங்களா?
😊😊😊😊😊😊
கொழந்தைங்க பொறந்த மூணாவது நாளே பேருங்கள முடிவு பண்ணியாச்சுமா. நம்ம இந்தி ஆசிரியர் சோதிடமும் பாப்பாரில்லையா?
😊😊😊😊
ஆமாம்.
😊😊😊😊😊😊
அவரையே ரண்டு கொழந்தைங்களுக்கு ஒரே அர்த்தம் வர்றமாதிரி பேராச் சொல்லச் சொன்னேன். சொன்னாரு. சாதகக் குறிப்பும் எழுதிட்டாரு.
😊😊😊😊😊
கொழந்தைங்க பேரு என்னன்னு சீக்கிரம் சொல்லுடா மருது.
😊😊😊😊😊
அம்மா, தற்கால தமிழர் நாகரீகப்படி இந்திப் பேரு தான் ரண்டு கொழந்தைங்களுக்கும். ரண்டு பேருங்களுக்கும் 'கனவு' -ன்னு அர்த்தம். பையன் பேரு ஸ்வப்ன் (Swapan). பெண் கொழந்தையோட பேரு ஸ்வப்னா ( Swapna).
😊😊😊
என்ன பேருங்கடா மருது. சொப்பன், சொப்பனாவா? என்னடா இந்த மாதிரி பேருங்கள வச்சுட்ட? சுப்பரமணின்னு பேரு வச்ச பசங்களத்தான் நாம சுப்பன்னு கூப்புடுவோம். பையம் பேரு சொப்பனாம்; சொப்பனாவாம். ரண்டு பேரும் சொப்பத் தூக்கிட்டு அலையவா இந்த மாதிரி பேருங்கள வச்ச?
😊😊😊😊
அம்மா, இந்திப் பேருங்கள உங்களாலதான் சரியா உச்சரிக்க முடியல.
😊😊😊😊😊
சரி. சரி. எம் பேரம் பேத்தி ரண்டு பேரோட எதிர் காலமும் நல்லா இருந்தா சரி.
(Swapan - masculine name - Swapna - feminine name - = dream)
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (6-May-17, 11:54 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 241
மேலே