தடைகளை உடை

மௌனங்கள் தடையாயிருப்பின்
மொழிகளை தவிர்த்திருப்பேன்
செயல்கள் பேசிட

எதிரொலி கேட்காவிடின்
எத்தனித்து மேலும் கதறி இருப்பேன்

பார்வை இருண்டிருப்பின்-புதிய
பார் ஒன்றில் கற்பனையாய் வாழ்ந்திருப்பேன்

மாயை பல தோன்றிருப்பின்
மாற்றங்கள் சில புகுத்தியிருப்பேன்

பாதைகளில் தடைகள் படர்ந்திருப்பின்
பகுத்தறிவுதனை பயன்படுத்தியிருப்பேன்

தோல்விகள் என்னை சூழ்ந்திருப்பின்
தேர்வுகளாய் எண்ணி தேறியிருப்பேன்

உண்மைகள் கசந்திருப்பின்
உரிமைகளை எடுத்துரைத்திருப்பேன்.

கடந்த காலம் என்னை தடுத்திருப்பின்
கடைமைகளை கருதி
காரியத்தை தொடர்ந்திடுவேன்.

எழுதியவர் : ஷாகிரா பானு (8-May-17, 8:53 am)
Tanglish : thadaigalai udai
பார்வை : 1761

மேலே