பொன் அந்தி மாலைப்பொழுது

'பொன் அந்தி மாலைப்பொழுது'
ஒரு இளங் காலை நேரத்தில்...
இது இதயவீணை எனும்
எம்ஜிஆர் படத்திலிருந்து...

இந்தப்பாடல் வரிகளைப்
பார்க்கும் போது
என் இதயத்தினுள் ஒரு
ஒலிபெருக்கி ஒலிப்பதாகவே
உணர்கிறேன்...

சொந்த வானொலிப்
பெட்டியில் அதிகம்
கேட்காமல்..
சொந்தமாக டேப்ரெக்கார்டர்
இல்லாமல்...
இருந்த காலத்திலும்
பலபாடல்கள்
மனதினில் புகுந்து
இன்னும் வாழ்ந்து
கொண்டுதானிருக்கிறது...

திருமணவிழா...
காதுகுத்து விழா...
கட்டிடத் திறப்புவிழா...
கோவில் திருவிழா...
இதுபோன்ற விழாக்களுக்குச்
சென்றோ செல்லாமலோ
காதுவழி கேட்ட பாடல்கள்
நம் இசை ஆர்வம் வளர
சமூகம் தந்த நல்லதொரு
கலாச்சாரக் கொடை...

திரைப்பட பாடலாசிரியர்கள்
இசையமைப்பாளர்களை
மெச்சுகிறேன்...
என் காதுகளை
என் நினைவாற்றலை
என் ரசனையை
நானே பாராட்டிக்கொள்வதில்
அகம் மகிழ்ந்து போகிறேன்...
😀👍

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (9-May-17, 11:57 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 237

மேலே