என் தேவதைக்காரி✍
![](https://eluthu.com/images/loading.gif)
💜
நேரம் 12 மணி
பனி உமிழும்
யாமத்தின் பொழுதில்
💜
தோளில் சென்னி சாய்த்து
கை இறுக பற்றி
மெல்ல என் கூட நடக்கிறாய்
💜
இந்த ஆள் அரவமற்ற
நெடுஞ்சாலையில்
ஒரு கவிதையை போல
💜
உன் அனைப்பின் வெப்பமானது
சிறு மழை தூறலில்
முழுதும் நனைந்து
💜
மிடர் மிடராய் பருகும்
தேநீரை போல இதமளிக்கிறது
திசுக்கள் முழுவதும்
💜
சற்று மேலே பார்
ககனம் நோக்கி
என் மீதான ஆற்றாமையில்
பொருமும் அந்த
முழுநிலவின் தவிப்பை....
💜💘💜 #தேவதைக்காரி...✍