அவளை மறந்துவிட நானும் மறைத்துவிட்ட இதயமும்

பாடல் வரி::
உன்னை நினைக்கவே
நொடிகள் போதுமே
உன்னை மறக்கவே
யுகங்கள் ஆகுமே

எழுத்து::

அவளைவிட்டு
என்னை பிரிக்க இயலாது என்று
என் இதயத்திற்கும் தெரியும்
பல முறை முயன்றும்
தோற்ற இடம் அல்லவா.,

இதயம் அவளை மறந்துவிட்டதாக நடிக்க கற்றுக்கொண்டது சிறப்பாக., காரணம் நான் வாழ
என் இதயத்தை தவிர
வேறு யாரும் அவ்வளவு
துடித்திருக்க முடியாது

நூலகம் போல
அவள் முகம்., அவள் நினைவுகளை சேமிக்க தொடங்கிய இதயத்தை அதன் போக்கில் விட்டுவிட்டேன்

எழுதியவர் : மீனாக்ஷி கண்ணன் (11-May-17, 3:27 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 105

மேலே