இதுதான் காதலா

இதுதான் காதலா

என் இதயத் துடிப்பினை
உன் இயக்கத்தில் உணர்கின்றேன்...

என்மனதின் அலைவரிசையை
உன் சிரிப்பலை வரும் திசை நோக்கி
திருத்தி அமைக்கின்றேன்....

காற்றில் கலைந்த
உன் கேசம் தொட்ட
என் முகத் தடயங்களை
மழிக்காது மூடிக் காக்கின்றேன். . .

நீ முடிக்காது பாதியில் விட்ட
வாக்கியங்களை என் சொந்த
வாக்கியங்களில் அமைத்து
சுகம் காண்கின்றேன். . .

உன் கண்கள் பேசும்
மொழியின் அர்த்தம்தேடி
மனத்தினுள் தொலைந்து போகின்றேன் . . .

உதவியாய் செய்யும்
சில வேலைதனை உனக்கு
உரிமையாய் செய்யும்
நாளெண்ணி நாட்காட்டியை கிழிக்கின்றேன் . .

நீ கிழிதெறிந்த பயணச்சீட்டிலும்
ஏதேனும் எழுதியிருக்க
மாட்டாயா எனஏங்கிப் பார்க்கின்றேன். . .

உன் எண்ண பொதிசுமந்த
மனக்க்குதிரை
கடிவாளம் களைந்தெறிந்து
வானளக்க பறப்பதாய் உணர்கின்றேன். . .

யுகங்களைக்காட்டி துடிப்பதாய்
உனக்காக காத்திருக்கும்
அந்த நிமிடங்களில்
கடிகாரத்தை கடிந்து கொள்கிறேன் . . .

உறவாய் வாழ்வில்
வரவே எண்ணி
மன ஆய்வகத்தில்
மறு ஆராய்ச்சி தொடர்கின்றேன் . .
சு.உமாதேவி . . .

எழுதியவர் : இதுதான் காதலா (11-May-17, 6:16 pm)
Tanglish : ithuthaan kaathalaa
பார்வை : 241

மேலே