தோட்டம் துரவு

தோட்டம் துரவு
பலருக்குச் சொந்தம்...
தொழிற்சாலைகள்
சிலருக்குச் சொந்தம்...
சொத்துக்கள்
இருப்போர்க்குச் சொந்தம்...

கதிரவன் ஒளி
வீசும் தென்றல்
விடிந்த காலை
உனக்கும் எனக்கும்
எல்லோருக்கும் சொந்தம்
சொந்தமான காலையில்
இனிய நண்பர்களுக்கு
பந்தமான காலை வணக்கம்...

பொழுதுகள்
போக்கக் கூடியதல்ல...
ஆக்கக் கூடியது
நம்மைக்
காக்கக் கூடியது...
👍😀👌

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (12-May-17, 9:57 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 140

மேலே