மது விழிப்பு பாடல்

நண்பா உஷாரு, கையிலும் நஜாரு, ஆய்டுவ பேஜாரு
லிக்கரு லிவரு பெய்லியரு, மெண்டல் டிஸாடரு
மூள மழுங்குது, நரம்பு புடைக்குது, நாடி அடங்குது
ஆன்ம குறையுது, ஆட்டம் அடங்குது கவுண்டவுன்
தொடங்குது, நரகம் இசுக்குது....
ரத்த வாந்தி எடுக்குற, தொடர்ந்து நீ குடிக்கிற
முடிவ நீயே தான் தேடுற, லங்சு வீங்கி போச்சி,கிட்னி
ஓஞ்சி போச்சி, வேணாம் வுட்டுரு, லிக்கரு பேஜாரு
ஹார்ட்டு டுமீலு ,வாழ்க்கை டமாலு, வேணாம் லிக்கரு..
உயிருக்கு கேடுனு உபதேசம் பண்ணுவான்
நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுனு சொல்லுவான்
சேல்சுக்கு டார்கட் வைப்பான், ஓரம் நின்னு உன்ன புடிப்பான்
கஜானாவ நிரப்பிடுவான், முழுசா தடுக்கல செய்ய நினைக்கல
வாழ வழியில்ல, வானளவு திரையில நூலளவு உபதேசம்
எதுக்குனும் புரியல...
குவாட்டர் பிரியாணி தந்தா கூட்டம் அள்ளுது
தடுக்கி விழுந்த கூட பீர் ட்ரீட்டு கேக்குது, கலாச்சாரம் மாறுது
நாடெங்கே போகுது யாருக்கும் தெரியல நடப்பது புரியல
எதிர்கால சமுதாயம் இளைஞர் கையில, எண்ணமெல்லாம்
மாறுது, சுயநலம் பெருகுது..
வளர கிடைக்கும் வாய்ப்பெல்லாம் குடியால இழக்கிறான்,
கண்ல புர விழுந்தபின்னே நமஸ்காரம் செய்யுறான்,
ரத்தத்த உறைய வைக்கும் வெய்யலிலும்
உழைப்பவன் மனிதநேய பண்பு எல்லாமே மறக்குறான்,
கூலிப்படை கலாச்சாரம் ஊக்குவிக்கும் சாராயம்
சட்டம் ஓழுங்க கூட மறக்க வைக்க அடி போடும்
மனமும் ஊனமாகும் பலமும் குன்றி போகும்
திடமான எண்ணம் கூட திரவமாயி காஞ்சி போகும்
பேஸ்மெண்டும் வீணாகும் கைகால் ஆட்டம் காணும்
சந்தேகம் வினையாகி வினைய அறுக்க செய்யும்
வேணாம் சாராயம், போய்டுவ ஆகாயம், தேடு ஆதாயம்
சரக்க நல்லா ஏத்தி பொணம் போல தூங்குறான்
விழிக்கும் வரையிலே வயித்துல புளி கரைக்குறான்
குழந்த குட்டிய மறந்து வீணா அலையுறான், நக நட்ட கழட்டி
குடிச்சி தெருவுல நிறுத்துறான்,சொன்னதையே திருப்பி திருப்பி
சொல்லுவான், கேக்கலான கோவப்பட்டு எகுறுவான்.
குடிகார அப்பனால சிறார் குற்றம் பெருகுது
சீர்திருத்த பள்ளியில எண்ணிக்க உயருது
குழந்த தொழிலாளியா ஆகுறான், பள்ளிய பாதியிலே
முடிக்கிறான், வரும கோடு வளர்ந்துட்டே போகுது
சமதர்மம் சமத்துவம் கேலி கூத்தாகுது
ஏழை ஏழையாவே சாவுறான்,இளமையில் விதவ கோலம்
போட வச்சிட்டு மறையுறான்,
முயலும் வெல்லுது ஆமையும் வெல்லுது ஆனா முயலாமா
வெல்லுமா,நாமும் திருந்தனும் நாட்டையும் திருத்தணும்
நல்ல குடிமகனா சாகனும்,வரலாறு நம்ம பத்தி பேசணும்

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!

"அரிது அரிது மானிடராய் பிறத்தலரிது அதனினும் அரிது
கூன் குருடு பிறடு நீங்கி பிறத்தல் தானே"

எழுதியவர் : பாடலாசிரியர் வீ .ர.சதிஷ்க (13-May-17, 6:19 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 127

சிறந்த கட்டுரைகள்

மேலே