விழிகளில் தத்தளிக்கும் கண்ணீர்த்துளி 555
என்னுயிரே...
உறவுகள் அருகில் இருந்தும்
உணர்வுகள் இல்லாமல் நான்...
உன் நினைவுகள்
எண்ணில் இருந்தும்...
நீ என்னருகில்
நிஜத்தில் இல்லை...
என் விழிகளில்
உருவாகும் கண்ணீர்த்துளி...
என் கன்னங்களை
தொடுவதே இல்லை...
மண்ணில் நீர்த்துளி
விழுந்துவிட்டால்...
வலியும், நினைவுகளும்
கரைந்துவிடுமாம்...
நான் நேசித்தவள் நீ வாழ்க்கை
துணையாக நீயே வரவேண்டுமடி...
உன்னோடு நான் இருந்த
நாட்கள் எல்லாம்...
நினைவில் வந்து
கொள்ளுதடி நித்தம் நித்தம்...
என் கனவில் நீ வரும்வரை
என் இதயம் துடிக்குமடி...
என் கனவில் நீ வராத
அந்த இரவு...
என் நிரந்தர
உறக்கமடி கண்ணே.....