வாழ்வை தொலைத்த பின்
உயிரே !
உன்
ஒற்றை சொல் கேட்க
உயிர் பூ வெந்ததடி ...
உன்
ஒரப்பார்வை நோக்க
என் சாலை தேய்ந்ததடி ...
உன்
இதயத்தில் இடம்பிடிக்க
இளமையும் நொந்ததடி ...
உன்
காதல் எதிர்பார்த்து
காலமும் கடந்தடி ...
இலவு காத்த கிளியாய்
இவன் மனம்
காயமும் அடைந்ததடி ...
போதும் அன்பே ...
இன்று
காதலும் கடந்தேன் ...
இதயத்தின்
காயமும் அடைந்தேன் ...
வாழ்வை தொலைத்த பின் ...