அன்பின் பிள்ளையார் சுழி

அம்மா !
உன்
கருப்பை தொட்டிலிலே
முட்டிய போதெல்லாம்
கனம் என்று கருதாமல்
தினம் என்னை சுமந்தாய் !

அம்மா !
என் உயிரை
பிணைத்தது உன்
தொப்புள் கொடி ! -
அது
தொப்புள் கொடி அல்ல !! - உன்
அன்பின் பிள்ளையார் சுழி !!!

எழுதியவர் : சரவணக்குமார்.சு (14-May-17, 4:10 am)
சேர்த்தது : சரவணக்குமார் சு
பார்வை : 314

மேலே