அன்னையர் தின வாழ்த்துக்கள்

அன்னையர் தின வாழ்த்துக்கள்

அன்னையர் தினம்
***************************
அகிலத்தை காண வைத்து
அனுதினமும் மகிழ வைத்து
அணுஅணுவாய் ரசிக்க வைத்து
அவரவர் உதிரத்தில் கலந்து
இதயத்தில் உயிராய் வாழும்
அன்னையர் அனைவருக்கும்
என்சிரம் தாழ்ந்த வணக்கம் !

அன்னையிலா உயிர்களும் இல்லை
அவரை நினையாத மனங்களும் இல்லை
அன்னைக்கு ஈடாக எவரும் இல்லை
அதனை மறுப்பார் உலகில் இல்லை !

அன்பில் இமயம் அன்னையர் தானே
அன்றும் என்றும் மாறாத நிலைதானே
தாயின் சிறந்ததொரு கோவில் இல்லை
தாயின் பாசம் வற்றாத கடலின் நிலை !

தாயை மறப்பவர் உயிரில்லா உடலே
இதயம் இருந்தும் இல்லாத நிலையே !

அன்னையை வணங்கிடுவீர்
இமைபோல காத்திடுவீர் !

அன்னையர் தின வாழ்த்துக்கள் !

பழனி குமார்
14.05.2017


Close (X)

10 (5)
  

மேலே