அம்மாவுக்காக

அம்மாவுக்காக...
உடல் சுமந்து
உயிர் கொடுத்து
உகந்த பெயரிட்டு
உடுத்தாடை அணிவித்து
உருக்கம் காட்டி
உதிரம் பாலாக்கி
உணா கொடுத்து
உணைதல் தவிர்த்து
உறக்கம் துறந்து
உணர்வுகள் வளர்த்து
உச்சி முகர்ந்து
உள்ளங்கை பிடித்து
உறவுகள் கொடுத்து
உயரங்கள் தோட
உட்கண் பெருக்கி
உடலுழைப்பு தந்து
உலகம் காட்டிய
உன்னத பிறப்பே
உந்தன் பிணைப்பு
உத்வேகம் சேய்க்கு
உன்னதம் உனதாய்
உலகே போற்றும்
உரு நீயே
அன்னையாய் திகழும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.