எனக்கானப் பாதையை தேடுகிறேன்

நினைவுகள் ஊடுருவி உயிர்வதை செய்கிறது....
மறதி மருந்தாகி என்னைத் தேற்றாதோ...?

நாடித் துடிப்பும் தாளம் பிசகி
நலிந்த ஓசையில் ஒலிக்கிறதே....

விரல்பரிசம் இழந்த என்வீணை
நாதம் மறந்து கிடக்கிறதே.....

பதலறியா கேள்விகள் எண்ண மேடையில்
புதிராய் மௌன ஊர்வலம் போகிறதே....

சோலையின் நடுவே பயணித்தாலும்
சோர்ந்து பாதம் தளர்கிறதே...

பரந்து விரிந்த இந்த பாதளத்தில்
என்கானப் பாதையை
இன்னும் இன்னும் மனம் தேடுகிறதே...

கவிதாயினி அமுதா பொற்கொடி

இனிய காலை வணக்கம்!

எழுதியவர் : வை.அமுதா (14-May-17, 4:40 pm)
பார்வை : 181

மேலே