சுவாசமாகி வாழ அவகாசம் கொடு
சுவாசமாய் வாழ அவகாசம் கொடு.......
என்னுள் சென்று உயிரானாய் !
எனை இயக்கும் சக்தியும் நீ ஆனாய்
கண்ணில் மட்டும் தெரியாமல்
கவி உணர்வைத் தூண்டினாய்
உன்னில் வந்து கலப்பதற்கு
உறுதி கொண்டு யான் விழைந்தேன்
பேதைப் பெண்ணே பொறுத்திடு
புதுமையில் மாதர் உய்வதற்கு
புரட்சி எழுச்சி சூழும்வரை
ஏற்புடை கவிதைப் படைத்திடு
ஏடாய் சமைத்து விதைத்திடு
ஆணையிட்டு அரூபமானாய்...
என்னில் உன்னை நான் கொள்ளேன்
உன்னில் கவிதை உறங்கும் வரை.....
எண்திசையும் சாட்சி வைத்து
வாக்கும் தந்தாய் விசுவாசமாய்....
எனக்குள் என்னை தேடுகிறேன்
இதயம் தொட்டதை பாடுகிறேன்
பாவுமடன் பண்பை பண்ணாக்கி
பூமியில் எங்கும் தூவுகிறேன்....
புழுதிப் புயல் என்னை வதைக்கிறது
இழுதையில் இழைப்பாய் சிதைக்கிறது
சிதையாய் நான் அடங்கும் முன்னே
சுவாசமாகி அவகாசம் கொடு!
கவிதாயினி அமுதா பொற்கொடி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
