முளைத்தது

நீல வானம்
நிலவை வைத்துக்கொண்டது-
பொட்டாய்..

மேகத்துக்குப் பிடிக்கவில்லை,
மறைத்தது நிலவை..

வான வயலில்
விதைத்தது,
விண்மீன் விதைகளை..

விதை முளைத்து
வெளிச்சமாய்-
கண்சிமிட்டும் தாரகைகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-May-17, 6:14 pm)
Tanglish : MULAITHATHU
பார்வை : 151

மேலே