கொஞ்சம் காதல்

கொஞ்சம் காதல்
===============

நிலவை கொஞ்சம் உருக்கி
உன்னழகை அதில் நிரப்பி
உன் பெயரை எடுத்து பொருத்தி
மன வானில் பறப்பேனே...!!!

இமைகள் கொஞ்சம் விலக்கி
இரு பார்வை ஒன்றாய் கலக்கி
இதழ் நடுவே மூச்சை நிறுத்தி
முழுமனதாய் புவியில் காப்பேனே...!!!

இதய கூட்டை கொஞ்சம் ஒதுக்கி
உன் பாதம் என்னுள் செதுக்கி
அதிசய விண்மீன் பொறுக்கி
என்னுயிர் சேர்த்து கொடுப்பேனே...!!!

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (17-May-17, 7:38 am)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : konjam kaadhal
பார்வை : 475

மேலே