VEJ WORLD

சாப்பிட வந்தவர் : வெஜ் பஜ்ஜி கொண்டுவா !

சர்வர் : பஜ்ஜினாலே வெஜ் தானே .இது பியூர் வெஜிடேரியன் ஹோட்டல் சார் !

சா.வ : பின்ன போர்ட்டில பிரியாணியை மட்டும் வெஜ் பிரியாணின்னு எழுதியியிருக்கீங்க ?

சர்வர் : ஓ (ஆச்சரியத்தில் ) வேற என்ன சார் வேணும் ?

சா.வ : வெஜ் வெங்காய தோசை , வெஜ் மசாலா தோசை !

வந்தவர் அயிட்டங்களை சாப்பிட்டு முடித்துக் கொண்டிருந்தார்
சர்வர் மீண்டும் வந்தார் .
சர்வர் : வெஜ் டீ வெஜ் காபி எது வேணும் சார் ?

சா. வ : வெஜ் டீ வெஜ் காப்பியா அது என்னது ?

சர்வர் : பியூர் வெஜ் தேயிலை டார்ஜிலிங் டீ ; வெஜ் மைசூர் பீபிரி காபி SEED காபி !

சா .வ : நான் காபி டீ ரெண்டும் சாப்பிடறதில்ல

சர்வர் : பின்ன பில் தரவா ?

சா.வ : நோ , வெஜ் ஆரஞ் ஜூஸ் கொண்டுவா ?

சர்வர் : !!!!

வந்தவர் சாப்பிட்டு முடித்து பில் கொடுக்கும் போது ஒரு பையை நீட்டினார் சர்வர் .

நான் பார்சல் ஒன்னும் சொல்லலியே .

முதலாளி உங்களுக்கு ஃ ப்ரீ யா கொடுத்திருக்கார் சார்

என்னது ? சா.வ

வெஜ் ஃ புரூட் சாலட் சார் ர்ர்ர்ர்...............................சர்வர்

-----வெஜ் கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-May-17, 10:32 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 164

சிறந்த நகைச்சுவைகள்

மேலே