யதார்த்த கவிதைகள் - கண்ணில் பட்டதும், மனதில் பட்டதும் வார்த்தைகளாய்
மகிழ்ச்சி- "மனமே மறக்காமல்! என்றும் நினைக்க வைக்கும் மனிதர்கள் தான் மகிழ்ச்சிக்கு காரணம்". --நage
சுயநலம் -" சுயநலமாய் வாழத்தெரியாதவனால் மட்டுமே உணர முடியும்" --நage
அம்மா - "அன்பை மட்டும் மழையாகப் பொழியத் தெரிந்தவள்" --நage
அப்பா - "குழந்தைகளின் தெய்வம் (குறிப்பாக மகன்களுக்கு)" --நage
"காதல் - 25 வயது குழந்தையை ரசிப்பது" --நage
ரசனை- "நிகழ்வுகளை வரிகளாகவோ வார்தைகளாகவோ வர்ணிக்க தெரிந்தவனுக்கு வாழ்கை சற்றே அழகாக தோன்றுகிறது". --நage
இதயம்- "துடிப்பது லப் டப்பிர்காக மட்டுமல்ல மற்றுமொரு இதயத்தின் அன்பிற்காகவும்". --நage
கல்வி- "ஒருவன் கற்ற கல்வியை விட அவனை காக்கும் கடவுள் வேறொன்றும் இல்லை". --நage
எழுதுகோல்- "கவிஞனின் ஆயுதம்! எண்ணங்களை எழுத்தாக்கி ஏற்றத்தை உண்டாக்கும் ஏணி". --நage
கணிப்பொறி- "கற்கால கடவுளை மிஞ்சிய கலியுக கடவுள்" --நage
கண்ணாடி - "என் அழகையும், கண் அழகையும் காணக் கிடைத்த மற்றுமொரு கண்" --நage
வாழ்க்கை - "நாம் நாமாக வாழாமல், இந்த நாடக உலகில் கைதட்டல் வாங்கும் சிறந்த நடிகர்களாக வாழ்வதே சிறந்தது". --நage
பாலாடை - "வெண்மையில் உண்மையாய் இருப்பது இது மட்டுமே!". --நage
அழகு - "வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது, ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும், வண்ணமாகவோ! எண்ணமாகவோ! இருக்கலாம்" --நage
கடிதம் -"இதயங்களை இணைத்த அன்றைய இணையம்". --நage
ஜல்லிக்கட்டு - "காளைகளை களத்தில் சந்திப்போம். இது நமது கனவாகிவிடக்கூடாது! விழித்திரு தோழா! போராடு தமிழா!!". --நage