திசை மாறிய பறவை

கல் மனமறியாது கடந்தேன் -அவளை
கொல் என கொல்லுதே - கவலை
சொல் ஒன்றைச் சொல்லாத வரை
சென்றது திசை மாறிய பறவை..!!

உள்ளத்தைத் திருடிய தேவதை..
உள்ளுக்குள் உருக்குது அவள் வதை..
மெல்லிய இதயத்தில் வேதனை..
முள்ளென குத்துதே இது யார் வினை..

நெல்லிக்கனி அவள் இதழ்கள்
நல்லாப் படைத்த வரங்கள்
கள்ளுண்டு தவிக்கிறது விழிகள்
கள்ளி உன்னை சுமக்கிறது என் மொழிகள்

வில்லாக வளைந்து நீ வரணும்
வேலான விழியாலே என்னைச் சுடணும்
தேளாக கொட்டுது உன் சிநேகம்
துள்ளாமல் துள்ளுது என் இதயம்

எழுதியவர் : கவித்தென்றல் ஏரூர் (18-May-17, 3:28 pm)
சேர்த்தது : selvi sivaraman
பார்வை : 220

மேலே