எனக்குள்ளே அவள்

எனக்குள்ளே அவள்...
****************
குழந்தை போல அழுகிறாளவள்
மனைவியருகே என்னை அணைத்துக்கொண்டு...

நான் அறிந்தேன்,
துடித்துப்போனால்
என்னை விட்டு விலகையிலே..

பிரிவு ஒரு கொடிய நோய் என்பதை
அவள் அப்போதுதான் உணர்ந்திருப்பாள்..

புதிதாய் பூத்த மலரவள்
அவள் பனித்துளிகளை
திருடிய கள்வன் நானானேன்...

உடைந்த மரக்கிளையான
என்னையும்
புன்னகைக்க வைத்தவளவள்..

நான் விலகியிருக்கக்கூடாது
அவள் விழிகளை விட்டு,
அவள் அழகை சுமந்து கொண்டே
வாழ்ந்திருக்கலாம்...

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (21-May-17, 3:39 pm)
Tanglish : enakulle aval
பார்வை : 214

மேலே