மனமும் போனதே களவு
எட்டிப் பார்க்கிறாள் கன்னி
மனதில் காதலனை எண்ணி
அவளுக்கு பின்னே நிலவு
மனமும் போனதே களவு
சிரிப்பில் தங்கம் வைத்தாள்
நிறத்தில் மேகம் வைத்தாள்
பார்த்தவர் விழுகும் படிக்காய்
அழகில் தடுக்க வைத்தாள்
முகமும் கூட நிலவோ
வெளிச்சம் கண்ணைக் கூச
குரலும் கூட குயிலோ
கேட்க ஆவல் வர
பக்கம் சென்றேன் நானே
பறந்து சென்றாள் அவளே
அக்கம் பக்கம் தேட
கண்டது கனவு தானோ..