உரிமையாக கேட்டேன் உறவாகிட
உன்னைத்தானே கேட்டேன் சம்மதமா என்று
என்றாவது கேட்டேனா எம்மதம் நீயென்று
காதல் மதம் எனக்குப் பிடித்துவிட்டது
அடக்கும் அங்குசம் உன் இதயத்திலுண்டு
அடங்க நினைக்கிறேன் நான் உனக்குள்
தடங்கல் ஏதென நீ சொல்லிவிடு
தயக்கம் ஏனம்மா இசைந்துவிடு என்னிதயத்திற்கு
கசையடி உண்டென்றாலும் நூறு கொடுத்துவிடு
பசையாக ஒட்டிக்கொண்டாய் பிய்க்க நினைக்காதே
தசைகள் எல்லாம் தனித்தனியாகும் கவனம்கொள்
அருமையாக வெல்லாம் எனக்கு பேசத்தெரியாது
உரிமையாக மட்டுமே கேட்கத் தெரியும்
ஏனெனில் ஏற்கனவே எனை வென்றுவிட்டாய்
உன் வாய் திறந்துமட்டும் சம்மதம் சொல்