நட்புள்ள சினேகனுக்கு

இந்த பாா்
அதை எண்ணிப் பாராயடா...
நம் நட்பை
அதற்கு எடுத்துக் கூறாயடா...

உன் தோள் மீது சாய்ந்தேன் தோழமையோடு
அது காதல் என்றது;
உன் மடிமீது சாய்ந்தேன் மனநிம்மதியோடு
அது காமம் என்றது;
இவை இரண்டும் இன்றி பழக முடியாதா?
ஏன் இந்த எதிரெதிா்பாலின எதிா்ப்பு?

இரவுப்பயணங்கள் பூண்டோம் - நம்
உறவின் எல்லையை தாண்டோம்;
பழிச்சொல் பலவற்றை கடந்தோம்- நல்
வழியது மாறாமல் நடந்தோம்

நான் உன் சகோதாிக்கு நிகராகவேண்டுமென எண்ணம்கொண்ட நேரத்தில்,
நீ என் தந்தைக்கு நிகரான விந்தையை ,
இந்த மானிட மந்தைக்கூட்டம் அறியுமா?

சிலசமயங்களில் என் பெண்மையின் தன்மையை நான் உரைக்காமலே,
என் கண்ணதை கண்டுணா்ந்த உன் தாய்மைதனத்தின்
உண்மையை இந்த உலகம் உணருமா?

அது நம்மீது சேற்றினை தூற்றினாலும் நமநட்பு
நாற்றினை போல துளிா்விடும் என்பதை அறியாததே,
இந்த பாா்
அதை எண்ணிப் பாராயடா...
நம் நட்பை
அதற்கு எடுத்துக் கூறாயடா...

எழுதியவர் : கம்பன் (22-May-17, 1:33 am)
பார்வை : 632

மேலே