தாவணி விசிறி
வெப்பத்தால் மயக்கமுற்றேன்
பதறிய நீ என்னை அமரவைத்து
உன் தாவணி முனையால் கவரி வீசினாய்...
நாழிகை பல கடந்ததும்
நீ கேட்கிறாய்
"வெயிலின் வேகம் தனியவில்லையா?. இன்னும் மயங்கியே இருக்கிறீர்களே?"
சிரித்துக்கொண்டே நான் கூறினேன்
"வெயிலின் வேகம் தணிந்தது,
உனதுஅன்புமுன் என் ஆண்மை பணிந்தது,
உன் சுகந்தத்தை என் நாசியும் அணிந்தது,
நாம் நெருக்கமுறும் நேரமும் கனிந்தது..."
நாணத்துடன் தாவணியில் அடித்த கூறியது "நாளைக்கும் வெயிலில் இருந்து வா" என்று..