கலைந்தது கானல்நீராய்

இரும்பு வழி
மின்சக்தி பாய்ந்தாற்போல்

இருவிழி வழி
உன் ரூபம் நுழைந்தது

இருதய வழி
உன் நினைவு ஊடுருவியது

என் புலன்கள் வழி
உன் பெண்மை கலந்தது

துயில் எழுந்ததால்
சில நிமிட இன்பமும் கலைந்தது கானல்நீராய்...

எழுதியவர் : தமிழ் தாசன் (22-May-17, 12:32 pm)
சேர்த்தது : பாலா
பார்வை : 879

மேலே