இயற்கையின் கவிதை
கோடை கால மாலைப் பொழுது...
காதலியின் மௌனமாய் வெப்பம் தகித்த சூரியன் சற்றே இளைப்பாற சென்றிருந்தது....
அப்போது...
பருவம் கனிந்த அழகிய பருக்களாய் வந்து கவிதை தொடங்கியது மழைத்துளி...
வருந்தி தோய்ந்த இலைகளை அன்பால் வருடிச் சென்றது காற்று...
காதலனைக் காண தவித்த மழையைக் கடிந்துக் கொண்டது இடி.....
மழையைப் பிரிய முடியா ஏக்கத்தில் கரு மை பூசியது மேகம்...
உயிரில் கலந்த மழையால் மகிழ்ந்து மணம் வீசியது மண்....
அஹா எத்தனை அழகு!!!
கோடையில் மழை இயற்கையின் அன்பு கவிதை!!!