தொலைத்ததெல்லாம் மீட்பதெப்போது
மகிழ்ச்சி மறந்த தோழனைக் காண இயலாமல் கண்ணை மூடிக் கொண்டது மேகம்..!
மண்ணின் மணம் பரப்பி மகிழ முடியாமல் விஷம் அருந்தி விட்டது காற்று..!
வறட்சி ஆடை உருவியதால் அவமானத்தில் வாய் பிளந்து உயிரையும் விட்டது நிலம்..!
வளங்கள் வெட்டப் பட்டதால் வலிக் கொண்டு மூர்ச்சையாகி விட்டது ஆறுகள்..!
மரத்தை மறந்த மனிதன் மட்டும்
மகிழ்ச்சிக்கான வழியைத் தேடுகிறான்....
தொலைத்ததெல்லாம் மீட்பதெப்போது?