ஏக்கமுடன் மையல்
சொல்லோடு பொருள் கொண்ட மையல் மொழி
கடலோடு காற்று கொண்ட மையல் அலை
மண்ணோடு முகில் கொண்ட மையல் மழை
மழையோடு வெயில் கொண்ட மையல் வானவில்
உன்னோடு நான் கொண்ட மையல்....!!!
அறியத்தான் தவிக்கிறேன்.....
ஆனால் சிந்திக்கும் போதெல்லாம்
உன் கடைவிழி பார்வையால்
சிந்தனை மறக்கிறேன்.....
விடை தரவாவது மௌனம் கலைவாயா?