பெண் காதல்
அமைதியான எனக்குள்ளும்
ஆயிரம் ஆர்பரிப்புகள்
உன்னை காண்டால்
உன்னை பார்த்தும்
பார்க்காதது போல்
நடிக்கிறேன்!
தனியே சிரித்து
மறைகிறேன்!
உன் பெயரை எழுதி
ரசிக்கிறேன்!
ஊடல் என்றால் கண்ணீர்
இரைக்கிறேன்!
இதை காதல் என்று
சொல்வதா?
இல்லை
நட்பின் எல்லை என்று
கொள்வதா?
எதையும் எதிர்பார்க்கா
உன்னிடம்!
எப்படி காதலை
எதிர்பார்ப்பது?
சொன்னால்
மவுனமாய் ஏற்பாயா?
இல்லை
வார்த்தையால் வெறுப்பாயா?
இல்லை
விமர்சனங்கள் கோர்பாயா?..
சேமித்த காதலை சேர்காமல்
தவிக்கிறேன்!
உயிர் கோர்க்காமல்
துடிக்கிறேன்!
உடல் வியர்காமல்
இளைக்கிறேன்!
தெரிந்தும் தெரியாமல்
நடிக்கும் உன்னிடம் எப்படி
சொல்வது என் காதலை?
சொல்ல துணிந்தால் மெளனப்
போராட்டம்!
சொல்லாமல் ஏங்கியே மன
போராட்டம்!
மறந்து விட நினைத்தாலும்
மரண போராட்டம்!
சிறு சிறு விசயங்களை கூட
சொல்லும் என்னிடம்
காதலை மட்டும்
மறைகிறாயா?
என்னை மறக்க
நினைகிறாயா?
தொலைவால் துளைக்க
நினைகிறாயா?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
