சுயநலமென்னும் வைரஸ்

வைரஸால் பாதிக்கப்பட்ட மென்பொருள் திறமைசாலியின் கண்டுபிடிப்பு புதிய வைரஸ்...
இது காலம் காலமாகத் தொடரும் வைரஸ்...
சமூகத்தை, அடக்கி, முடக்க எண்ணும் வைரஸ்..
அனைவரையும் தன்முன் பணியச் செய்ய வைக்கும் வைரஸ்...
பணத்திற்காக எங்கும் வைரஸ்...
ஓ மை காட்!
இந்த மனிதர்களின் மென்பொருளாகிய மனம் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டுவிட்டதே இந்த வைரஸால்...
வன்பொருளாகிய உடலில் இதன் வெளிப்படுகிறதே வரக்கூடாத புதுப்புது வியாதிகளாய்...

ஜாக்கிரதை! ஜாக்கிரதை! அண்ணன்மார்களே ஜாக்கிரதை...
ஜாக்கிரதை!
ஜாக்கிரதை!
தம்பிமார்களே ஜாக்கிரதை...
ஜாக்கிரதை!
ஜாக்கிரதை!
தாய்க்குலமே ஜாக்கிரதை...

காட்டுமிராண்டித்தனத்தின் ஒட்டுமொத்த மாற்றி அமைக்கப்பட்ட நவீன கால உருவம் தான் இந்த வைரஸ்...
கொலைவெறி தாண்டவம் ஆடும்...
உலகை முடக்க இரவு, பகலாகப் பாடுபடும்...
பிறரைக் கெடுப்பதே இந்த வைரஸின் நோக்கம்...
இந்த வைரஸ் புகுந்த இடம் அகந்தையும், அழுக்காறும், போட்டியும், பொறாமையும், அதிகார எண்ணமும் தலைவிரித்தாடும்...
நம்பிக்கைத்துரோகம் செய்யும்...

இதிலிருந்து உங்களை நீங்க பாதுகாத்துக் கொள்ளத் தயாரா??

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-May-17, 7:27 am)
பார்வை : 1324

மேலே