வாழ்க்கையில் இரு உறவுகள்
தனிமைத் தருவதோர் உறவு
அதுவே துறவு பேரின்பம்
காதல் தருவதோர் உறவு
இனிமை இம்மை இன்பம்
எவ்வுறவை நாடுவது மனம்
என்பது அவரவரே அறிவார்
வேறுயாரறிவார் அவனைத்தவிர