வாழ்வின் மாயை
மனிதா கலங்காதே இரவை/ இருளை கண்டு உனக்கு அதுவன்றி வெற்றி ஏது?
அவைகள் உன் எதிர் கால வெற்றிக்காக உன்னுடன் வந்தவையே
அதை அறியாமல் திசை மாறாதே
மனித வாழ்வின் விடியலின் மொட்டுகள்
தேங்கி இருப்பது இரவின் மடியிலே
அவைகளை சந்திக்கும் போதே பிரச்சனை என்ற மாயை
மறந்து வாழ்வின் விடி வெள்ளியான பூக்கள் மலர்கின்றன -மனிதனே
அதனாலேயே இருளை தயக்கமின்றி சந்தி
உன் வாழ்வு தெளிவடைந்து செழிப்படையும்
எந்த துன்பம் வந்தாலும்
இருளை நீந்தி கடப்பவன் ஒளியை காணுகின்றான்
ஒளியை கண்டவன் யாரும் இருளை சந்திக்காமல் வருவதேயில்லை